Sunday 10 July 2016

உலகம் அழகானது- மொங்கோலியா

ஜுன் ஒன்று 2015, எனக்கு இருந்தது இரண்டு 'ஓப்ஷன்ஸ்' மட்டுமே. ஒன்று, கோர்கி- தேரெல்ஜ் பார்க்(Gorkhi-Terelj National Park) செல்வது. இல்லையேல் அன்று உலான் பதார் நகரில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் சிறுவர்கள் தினத்தில் பங்கேற்பது. காரணம், மறு நாள் ரஷ்யா செல்வதற்கான பேருந்து பயணம் உறுதியாகியிருந்தது. சற்றும் யோசிக்காமல் சிறுவர்கள் தினத்திற்கு ஆயத்தமானேன். நான் எடுத்த முடிவு கொஞ்சமும் வீண் போகவில்லை. என் கேமராவிற்கும் என் கண்களுக்கும் நல்ல வேட்டை அன்று. 

இரண்டு கால்கள் கொண்ட வண்ணத்துப்பூச்சிகளாக குழந்தைகள்.

கறுத்த இரவில், கறுப்பு பாறையின்மேல், கறுப்பு எறும்பு என்ற சுபி பொன் மொழிக்கு பொருத்தமான குழந்தைகளின் கறுவிழிகள்.

ஏழ்மைக்கும் மகிழ்ச்சிக்கும் அணு அலவும் சம்பந்தமில்லை என்பதை தன் குழந்தைகளுக்கு உணர்த்திக் கொண்டிருந்த பெற்றோர்கள். 

என்ன நடந்தாலும் மகிழ்ச்சி ஒன்றே எங்கள் தேர்வு என்று உல்லாசத்தில் இளைஞர்கள். 

அன்று இவை அனைத்தும் எனக்கு உணர்த்திகொண்டிருந்தது ஒன்று மட்டுமே...

உலகம் அழகானது..