Tuesday 4 October 2016

Taxi ஓட்டுனர் தந்த ராஜ உபசரிப்பு



கொஞ்சமும் எதிர்பார்த்திராத சம்பவம். கொஞ்சமும் எதிர்பார்த்திராத உபரசரிப்பு. இடம் Kegen, Kazakhstan.  ஐந்து நிமிடம் மட்டுமே பழக்கம் ஆனால், ஐம்பது ஆண்டுகள் பழகியது போல ஒரு நட்பு. இனி எங்கும் போக வழியில்லை என்று 'கரகர பல்லத்தாக்கில் Karakara Valley தவித்துக்கொண்டிருந்தபோது கடவுள் போல வந்தார் taxi driver AIDIN . போகும் வழியில் தன் வீட்டிற்க்கு அழைத்துச் சென்று ராஜ உபசரிப்பில் எங்கள் மனதில் இடம் பிடித்தார்.

இயற்கை என்பது அழகு, இயற்கை என்பதே கடவுள். கண் அசைக்க விடாத அழகு, கண்கொல்லா அழகு. நெடுந்தூதூர பாலைவனப் பாதையின் நடுவே நீர்வீழ்ச்சியின் மூழ்கியவன் போல சந்தொஷத்தில் மிதக்கலானேன். வானத்தில் கடந்து செல்லும் மேகங்கள் மலைகளின் மேல் இளைப்பாறுவது போன்ற காட்சி, அருகே சென்று பார்த்தால் பனிக் கட்டிகளை தலைக் கவசமாக்கிக்கொண்ட கர்வத்தில் நிமிர்ந்து நிற்கும் மலைத் தொடர்கள்... அடடா..............  காணொளியைக் கண்டிபாகப்  பாருங்கள்  உங்களுக்கு புரியும்.

Saturday 17 September 2016

பிரமிக்க வைக்கும் காட்சிகள்- 30 மணி நேர பஸ் பயணம்

இந்த காணொளியில் வரும் காட்சிகள் இந்த உலகத்திற்கு சொந்தமானதே. பிரமிக்க வைப்பதுடன் வியக்கவும் செய்யும். படர்ந்து கிடக்கும் கண்கொள்ளாக் காட்சிகள். கடந்து வரும் காட்சிகளைப் பார்த்து நான் வியந்த வண்ண்ம் வாயைப் பிளக்க, பேருந்து ஓட்டுனரோ "இது நான் அன்றாடம் பார்க்கும் காட்சியடா" எனும் வகையில் எனைப் பார்த்து சிரித்தபடியே வந்தார். காணொளியைப் பார்த்துவிட்டு பிடித்திருந்தது என்றால் SUBSCRIBE BUTTON அழுத்தவும். என்னைனைப் போன்ற பயணிகளுக்கு நீங்கள் செய்யும் சிறிய உதவி இது மட்டுமே.SHARE செய்தமைக்கும் நன்றி.......


Friday 16 September 2016

உலகம் உங்கள் அறைக்குள்ளே- பேக்பெக்கர்ஸ் ஓஸ்டல் கலாச்சாரம்




பேக்பெக்கர்ஸ்  ஓஸ்டல் வாழ்க்கையும் பயணமும் பிரிக்கமுடியாத ஒன்று. ஓட்டல்களைக் காட்டிலும் பேக்பெக்கர்ஸ் ஓஸ்டல்கள் நெடுந்தூரப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்க முக்கிய காரணங்கள் அதன் குறைந்த விலையும் கலாச்சாரமுமே. ஒட்டலைக்காட்டிலும் ஓஸ்டல் 50-லிருந்து 70 சதவிகிதம் மலிவு. அது மட்டுமின்றி ஒரு அறையில் 6 அல்லது 8 பயணிகள் தங்கும் நிலை ஒரு வேளை அசெளகர்யத்தை உண்டு செய்தாலும் ' ஒட்டு மொத்த உலகத்தையும் உங்கள் அறைக்கு இலவசமாக கொண்டு வரும்' சிறந்த முயற்சி என்றால் அது மிகையாகாது. அது மட்டுமன்றி உங்களுக்கு தேவையான உணவை சமைத்து உண்ண தேவைப்படும் எல்லா வசதிகளும் இலவசமாகக் கிடைக்கும். உண்மையும் மகிழ்சியும் என்னவென்றால், மனித நேயத்தை சுட்டுச் சாம்பலாக்கிக் கொண்டிருக்கும் சில குறிப்பிட்ட விஷயங்களுக்கு பேக்பெக்கர்ஸ் ஓஸ்டலுக்குள் NO ENTRY
















Sunday 10 July 2016

உலகம் அழகானது- மொங்கோலியா

ஜுன் ஒன்று 2015, எனக்கு இருந்தது இரண்டு 'ஓப்ஷன்ஸ்' மட்டுமே. ஒன்று, கோர்கி- தேரெல்ஜ் பார்க்(Gorkhi-Terelj National Park) செல்வது. இல்லையேல் அன்று உலான் பதார் நகரில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் சிறுவர்கள் தினத்தில் பங்கேற்பது. காரணம், மறு நாள் ரஷ்யா செல்வதற்கான பேருந்து பயணம் உறுதியாகியிருந்தது. சற்றும் யோசிக்காமல் சிறுவர்கள் தினத்திற்கு ஆயத்தமானேன். நான் எடுத்த முடிவு கொஞ்சமும் வீண் போகவில்லை. என் கேமராவிற்கும் என் கண்களுக்கும் நல்ல வேட்டை அன்று. 

இரண்டு கால்கள் கொண்ட வண்ணத்துப்பூச்சிகளாக குழந்தைகள்.

கறுத்த இரவில், கறுப்பு பாறையின்மேல், கறுப்பு எறும்பு என்ற சுபி பொன் மொழிக்கு பொருத்தமான குழந்தைகளின் கறுவிழிகள்.

ஏழ்மைக்கும் மகிழ்ச்சிக்கும் அணு அலவும் சம்பந்தமில்லை என்பதை தன் குழந்தைகளுக்கு உணர்த்திக் கொண்டிருந்த பெற்றோர்கள். 

என்ன நடந்தாலும் மகிழ்ச்சி ஒன்றே எங்கள் தேர்வு என்று உல்லாசத்தில் இளைஞர்கள். 

அன்று இவை அனைத்தும் எனக்கு உணர்த்திகொண்டிருந்தது ஒன்று மட்டுமே...

உலகம் அழகானது..